தமிழ் நாட்டில் அரசாங்க வேலைகளில் இருப்பவர்கள் ஒட்டு மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் 1 சதவீதம் தான்.... மற்றவர்களின் வருமானம் ஒவ்வொரு தொழிலை சார்ந்தது.... வேலையின் தன்மையை சார்ந்தது
முதலில் அரசாங்க வேளையில் இருப்பவரின் வருமானத்தை விவசாய பொருட்களுடன் ஒப்பிடுவது தவறு...... அதற்கு விவசாய கூலி வாங்குபவர்களுடன் தான் ஒப்பிட வேண்டும்.... இன்று ஒரு விவசாயியின் ஒருநாள் சம்பளம் குறைந்தது 500..... அதாவது மாதத்திற்கு 25 x 500 = 12,500/-... அதே போல் தனியார் கடைகளில் மாத வருமானத்திற்கு வேலை பார்த்தால் அதிக பட்சம் ரூபாய் 6000 லிருந்து 8000 எட்டாயிரம் மட்டுமே..... இந்த வருமானம் ஒரு விவாசாயியுடன் ஒப்பிட்டு பார்த்தால் மிக மிக குறைவு... மேலும் வேலை பளு மிக அதிகம்.... குறிப்பாக சென்னை மற்றும் இதர வியாபாரத்தை மையம் கொண்ட நகரங்களில் மாத வருமானத்திற்கு ஒரு ஜவுளி கடை அல்லது ஏதேனும் மல்ட்டி பிராண்ட் கடைகளில் வேலை பார்ப்பவர்களின் நிலையை எண்ணி பார்க்க வேண்டும்.... அவர்கள் ஒரு நாள் வேலை நேரம் குறைந்தது 9 மணி நேரம்.... எந்த அரசு விடுமுறையும் கிடையாது... அங்கு உட்கார்ந்து வேலை பார்க்க முடியாது... மாத வருமானம் மிக சொற்பமே (6000- 8000) .... ஆனால் என்ன செய்வது வேறு வழியில்லை....
விவசாயத்தில் சொந்த நிலம் வைத்து இருப்பவர்களுக்கு எந்த கஷ்டமும் அவ்வளவாக இல்லை.... உதாரணத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் இருந்தால் வருடத்திற்கு மூன்று அல்லது இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யலாம்..... கம்பம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம், சின்னமனூர், தேவராம், பெரியகுளம் போன்ற ஊர்களில் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யபடுகிறது....
மேலும் இந்த பிரதேசங்களில் மாந்தோப்புகள் அதிகம்... இதில் வருடத்திற்கு மூன்று மாதங்கள் உழைத்தால் போதும்... நல்ல வருமானம்... சொந்த தோப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. குத்தகைக்கு எடுத்தும் செய்யலாம்.... நிரந்தர மிராசுதார்களாக மிதமான செல்வந்தர்களாக இப்போதும் பலர் இருக்கிறார்கள்....
ஒரே ஒரு குறைபாடு தான் விவசாய தொழிலில்..... இன்று நல்ல கூலீ ஆட்கள் கிடைப்பது மிக மிக கஷ்டம்.... காரணம் இப்போது விவசாயிகளின் உழைப்பு முன்பு இருந்ததை போல் இல்லை...... மேனா மினிக்கி வேலை தான் அதிகம்....
விவசாயிகளின் இன்றைய ஒரே நோக்கம்.. அரசாங்கத்திடமிருந்து பல இலவசங்களை பெறவேண்டும்.... குறைந்த வட்டிக்கு கடன் வழங்க வேண்டும்... வழக்கமாக அதை முழுவதும் அப்படியே தள்ளுபடி செய்து விட வேண்டும்..... இப்படி இருந்தால் இந்த நாடு எப்படி முன்னேறும்......
விவசாயிகளுக்கு அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டிய முக்கிய பொருப்பு மற்றும் கடமை போதுமான நீராதரத்தை பெருக்குவது......ஆனால் நாம் அதை பற்றி சிறிதும் கவலை படுவதாக தெரிவதில்லை...... எதெற்கெடுத்தாலும் தேவையில்லாமல் தன் சுயநலத்திற்காக வெத்து போராட்டம் செய்வதுதான் இன்றைய ஃபேஷன்..... இதில் அய்யாக்கண்ணு போன்றவர்களுக்கு மிகபெரிய லாபம் கிடைக்கும்..... பல அரசியல் சூக்ஷமங்கள் இதில் அடங்கி இருக்கிறது....

0 comments:
Post a Comment